தமிழ்நாட்டில் நாளை கலைஞர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழா பிரமாண்டமாக கொண்டாடப்படவிருக்கிறது,
#India
#Tamil Nadu
#M. K. Stalin
#Lanka4
#celebration
#லங்கா4
Mugunthan Mugunthan
1 year ago

இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் வரும் ஜூன் 3 ஆம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ள இவ்விழாவுக்கான நூற்றாண்டு இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியும் இதனை வெளியிட்டனர்.
இந்த விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



