இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்சி வெளியீடு

#sports #Tamilnews #Breakingnews #ImportantNews #Sports News
Mani
1 year ago
இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்சி வெளியீடு

2016 முதல் 2020 வரை, நைக் இந்திய அணியின் அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சராக இருந்தது. அதன்பிறகு, 2020 முதல் இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக இருந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ்நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிலையில் அடிடாஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய இந்திய அணி ஜெர்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான மூன்று விதமான ஜெர்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.