2 அரசுப் பணிகளைச் செய்து, 8 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நபரின் மோசடி செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது
#India
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஒரே நேரத்தில் இரண்டு அரசுப் பணிகளைச் செய்து, கடந்த எட்டு ஆண்டுகளாக இரண்டு வேலைகளிலும் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நபரின் மோசடி செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கேம்பி யர்கஞ்ச் பகுதியில் சோனௌரா புசுர்க் கிராமத்தில் வசிக்கும் தர்கேஷ்வர் சிங், பகலில் மின்சாரக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் லைன்மேனாகவும், இரவில் ஹோம் கார்டாகவும் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக இரு துறைகளின் கண்களில் மண்ணை தூவி மாத சம்பளத்துடன் மற்ற சலுகைகளையும் அனுபவித்துவந்த தர்கேஷ்வர், மீது அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் முதல்வர் இணையதளத்திலே நேரடியாக புகாரளித்தனர்.
இதையடுத்து, புகாரின் விசாரணைக்குபின் தர்கேஷ்வர் மீது துறைரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.



