கிணற்றில் குதித்த மகளும், காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
#Death
#Tamilnews
#Breakingnews
#Died
#ImportantNews
Mani
2 years ago

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிணற்றில் விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பைத்தூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் முதல் மனைவி சத்யாவின் மகள் மேகலா மற்றும் 2வது மனைவியின் மகன் பிரியன் ஆகியோர் இடையே நேற்று டிவி பார்ப்பதில் தகராறு எழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த கணேசன் இருவரையும் திட்டி விட்டு கோபத்தில் டிவி ரிமோட்டையும் உடைத்த தாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மேகலா வீட்டில் இருந்த கிணற்றில் குதித்துள்ளார்.
மகளைக் காப்பாற்ற கணேசனும் கிணற்றில் குதிக்கவே அருகில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் சடலமாக மீட்டனர்.



