சிகரம் தொட்ட சாதனைப்பெண்

#SriLanka
Kanimoli
9 months ago
சிகரம் தொட்ட சாதனைப்பெண்

இவர் வாழைச்சேனையில்,சிவஞானசேகரன் நிரோஷினி தம்பதிகளுக்கு முதல் மகளாக பிறந்தார். தரம் 1 முதல் வரை 11 வரையான பாடசாலைக்கல்வியை வாழைச்சேனை இந்துக்கலூரியில் கற்றதுடன் தனது சிறுவயது முதல் கல்விசார் செயற்பாடுகளில் மிகுந்த திறமையுடையவராக காணப்பட்டார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 165 புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு மாவட்டமட்டத்தில் 11 வது நிலையினையும் அதே போன்று கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் அதிவிசேட சித்திகளையும் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்து கொடுத்தார். 

விஞ்ஞான, கணித போட்டிகள், தமிழ், ஆங்கில தின போட்டிகள், வர்த்தக, சமூக விஞ்ஞான போட்டிகள் என பல போட்டிகளிலும் பாடசாலைசார்பாக பங்கேற்று மாவட்ட, மாகாண மட்டங்கள் வரை வெற்றியீட்டியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. தனது உயர்தரக் கல்வியை மட்/ வின்சன்ட் உயர்தர தேசிய பாடசாலையில் தொடர்ந்தவர், கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் தோற்றி A,B,C சித்திகளை (இரசாயனவியல், உயிரியல், பௌதிகவியல்) பெற்றுக்கொண்டதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின், ஆயுர்வேத மற்றும் சத்திரசிகிச்சை கற்கைநெறிக்கு தெரிவானார்.

 நாட்டின் குழப்பமான சூழ்நிலைகள், கொரோனா காலத்து தனிப்படுத்துகை விடுமுறைகள் என தனது 5 வருட பல்கலைக்கழக கல்வியாண்டுகள் மேலும் நீடிப்பதை உணர்ந்த இவர், சமகாலத்தில் பிரபல்யம் அடைந்துகொண்டுவந்த தொழிற்கல்வி கற்கை நெறிகளின்பால் கவரப்பட்டார். அந்தவகையில் IICA எனும் தனியார் கல்வி நிறுவனமொன்றில் ஆயுர்வேத அழகு சாதன ப்பொருட்களின் உற்பத்தி மற்றும் மூலிகை அழகு சாதனவியல் என இரண்டு கற்கைநெறிகளை அதிவிசேடசித்திகளுடன் (A+) பூர்த்திசெய்து பட்டமும் பெற்றுக்கொண்டார். அத்தோடு நின்றுவிடாமல் " Apply what you learn " எனும் அவரது கோட்பாட்டுக்கு இணங்க , எவ்வித இரசாயன கலப்பும் இன்றி,மூலிகைகள் மாத்திரம் கொண்டு வீட்டிலே தயாரிக்கப்படும் அழகு சாதனபொருட்களுக்கான உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் ஒன்றை நிறுவி awantika ayush Herbal Beauty Products எனும் பெயர் சூட்டிக்கொண்டார். 

இதற்கான மூலதனமாக, தான் zoom வாயிலாக நிகழ்த்திய கணித, விஞ்ஞான பிரத்தியேக வகுப்புகளின் மூலம் கிடைத்த பணத்தினையே பயன்படுத்திக் கொண்டார்.awantika ayush நிறுவனத்தின் முதல் உற்பத்தி பொருளாக Herbal Hair oil தயாரானது. முதலில் 10 oil bottle மாத்திரமே தயார் செய்யப்பட்டிருந்தபோதிலும், பாவனைக்கு பின்னான வாடிக்கையாளர்களின் நேர்மறையான பின்னுட்டங்களினாலும், பரிந்துரைப்புகளின்பெயராலும் மூலிகை முடி எண்ணெய்க்கான சந்தைக்கேள்வி வெகுவாக அதிகரித்து சென்றது. அதிகரித்த கேள்வியை ஈடு செய்யும்வகையில் உற்பத்திகள் கூட்டப்பட்டத்துடன் இதர மூலிகையியல் அழகு சாதன உற்பத்தி பொருட்களும் அறிமுகம் செய்யப்பட்டது.

 (face creams, face pack, scrubs, lip balms, soaps, body lotion, face mask, shampoo, face wash, serum என 25 க்கும் மேற்பட்ட, skin types க்கு ஏற்ற உற்பத்திப் பொருட்கள் இதில் அடங்குகின்றன. ) குடும்பத்தாரினதும், நண்பர்களினதும் ஆதரவுடன்awantika ayush வணிகம் மேலும் மெருகூட்டப்பட்டதுடன், உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடையேயும் இம்மூலிகை உற்பத்திகள் பிரபல்யம் அடையத் தொடங்கியது . அவ்வாறாக அவுஸ்திரலியா, கனடா, கட்டார், சிங்கப்பூர், அமெரிக்கா,சுவிச்சர்லாந்து, ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், இந்தியா போன்ற நாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

 பிரஸண்யா சிவஞானசேகரன், தற்போது ஒரு ஆயுர்வேத வைத்தியராகவும், அதேநேரத்தில் awantika ayush வணிகத்தின் உரிமையாளராக, வளர்ந்துவருமொரு இளம் தொழிலதிபராகவும் திகழ்வது பாராட்டுக்குரியது. அண்மையில் எமது வளம்சேர் வாழையூர் கலைச்சங்கமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "காரிகை கனவு " விருது விழாவில் அவர் கெளரவிக்கப்பட்டத்துடன், All Ceylon Tamil Cosmetologist Federation நடாத்திய " சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் " விருது விழாவிற்கு அழைக்கப்படிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு