சுவிட்சர்லாந்தில் ஊழல் ஒழிப்பு சட்டங்கள் குறித்து அதிருப்தி
#swissnews
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஐரோப்பிய பேரவையின் பரிந்துரைகளை சுவிட்சர்லாந்து அமுல்படுத்த தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களினால் மேற்கொள்ளப்படக்கூடிய ஊழல் மோசடிகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஊழல் ஒழிப்பு தொடர்பிலான பரிந்துரைகள் செய்யப்பட் போதிலும் சுவிட்சர்லாந்து அதனை இதுவரையில் அமுல்படுத்தவில்லை.
சில பரிந்துரைகள் பகுதியளவில் மட்டும் அமுல்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



