அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது

இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டும்இன்றி ஷாருக்கான் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறார். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு போன்ற கோலிவுட் பிரபலங்கள் ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜவான் படத்திற்காக அட்லீ நான்கு வருடங்களாக மும்பையிலேயே மையம் கொண்டு இருந்தார். மேலும் படத்தின் பட்ஜெட்டும் ஒவ்வொரு நாளும் எகிறிக்கொண்டே போனதால் ஷாருக்கான் மிகுந்த பதட்டத்தில் இருந்தார். ஜவான் படம் வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. ஆனால் படத்தின் டிரைலர், டீசர் போன்ற எந்த அப்டேட்டும் தற்போது வரை வெளியாகவில்லை. இதனால் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும் என ரசிகர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர்.
அதன்படி செப்டம்பர் 7 ஆம் தேதி ஜவான் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலதாமதம் ஆனாலும் ஜவான் படம் தரமாக வெளியாகும் என ஷாருக்கான் மற்றும் அட்லீ ரசிகர்கள் நம்புகிறார்கள்.
மேலும் ஜவான் படத்தால் கிட்டதட்ட நான்கு ஆண்டுகளாக வேறு படத்தை இயக்க முடியாமல் அட்லீ தவித்து வந்தார். இப்போது ஜவான் படத்திற்கு விடுவு காலம் வந்துள்ளதால் அட்லீ அடுத்த பட வேலைகளை விரைவில் தொடங்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பும் இன்னும் சில தினங்களில் வெளியாக வாய்ப்பிருக்கிறது.



