வங்கியில் வைப்புத் தொகையாக 20 இலட்சம் ரூபாவை எடுத்துச் செல்லும்போது கொள்ளை
#Arrest
#Robbery
Kanimoli
2 years ago

மானம்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் வங்கியில் வைப்புத் தொகையாக 20 இலட்சம் ரூபாவை எடுத்துச் செல்லும்போது கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக மானாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.



