நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்
#SriLanka
#weather
#Rain
#land
Kanimoli
2 years ago

இலங்கையை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



