அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த செயலாளருக்கு சொந்தமான முட்டை கடையொன்றுசுற்றிவளைப்பு

#Egg #Police #Arrest #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த செயலாளருக்கு சொந்தமான முட்டை கடையொன்றுசுற்றிவளைப்பு

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்ததாக கூறப்படும் வடமேற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளருக்கு சொந்தமான முட்டை கடையொன்று இன்று (11) சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் குருநாகல் மாவட்ட அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவத்தகம, பிலஸ்ஸ, உடுமுல்ல பிரதேசத்தில் உள்ள முட்டைக் கடையை மாவத்தகம பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் குழுவொன்று சோதனையிட்டுள்ளது.

குறித்த இடத்தில் 50,000க்கும் மேற்பட்ட முட்டைகள் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை தொடர்பில் குறித்த சங்கத்தின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!