பள்ளிப் பைகள், காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க முடிவு: நிதி அமைச்சகம்

#SriLanka #srilanka freedom party #srilankan politics #sri lanka tamil news #School #School Student
Prabha Praneetha
2 years ago
பள்ளிப் பைகள், காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க முடிவு: நிதி அமைச்சகம்

பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைப் பைகள் மற்றும் காலணிகளின் விலைகள் தொடர்பில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது காலணி மற்றும் பைகள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டு உள்ளுர் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன.

டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏற்ப உள்ளூர் சந்தையில் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் சியம்பலாபிட்டிய, வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களம் இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை வழங்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் , விலை குறையவில்லை என்றால் உடனடியாக ஜனாதிபதிக்கு அறிவித்து விலையை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!