அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பசில்?: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

#SriLanka #Sri Lanka President #Basil Rajapaksa #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பசில்?:  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சித்திரைப் புத்தாண்டையடுத்து தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 “நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவக்கூடிய சிறந்த மற்றும் நிலையான திட்டத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டுமே அவ்வாறான திட்டத்தை வழங்கக்கூடிய ஒரு கட்சி என நான் நம்புகிறேன். அதற்காக நாங்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து பேசுகிறோம் 

புத்தாண்டின் பின்னர் நாம் எமது அரசியல் பிரச்சாரத்தை வலுப்படுத்துவோம். புத்தாண்டின் பின்னர் எமது ஜனாதிபதி வேட்பாளரை நாம் அறிவிப்போம்“,என அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் பண்டார, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதில் தவறில்லை என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!