பாடசாலை விடுமுறை: கல்வியமைச்சின் அதிகாரிகள் ஆலோசனை

#SriLanka #Ministry of Education #education #School #School Student #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
பாடசாலை விடுமுறை: கல்வியமைச்சின் அதிகாரிகள் ஆலோசனை

பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு ஆலோசித்து வருவதாக கல்வியமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து பாடசாலையின் விடுமுறை தொடர்பில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகின்றது.

எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 ஆண்டிற்கான சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!