இலங்கையில் அமெரிக்க இராணுவத் தளம்: தூதுவர் வெளியிட்ட கருத்து
#SriLanka
#America
#United States Ambassador to Sri Lanka
#Tamilnews
#Lanka4
Mayoorikka
2 years ago
இலங்கையில் அமெரிக்க இராணுவ தளத்தை அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் இலங்கை விஜயம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“இராணுவ முகாம் அமைப்பது தொடர்பில் நான் பல தடவைகள் கூறியுள்ளேன்.. இராணுவ முகாம் அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை.
SOFA ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ அமெரிக்காவுக்கு எந்த எண்ணமும் இல்லை..” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.