மூன்று பாடசாலை மாணவிகளை கடத்திய மூன்று இளைஞர்கள் விளக்கமறியலில்
#Tamil Student
#Prison
#Court Order
#Arrest
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
பலாங்கொடை நகரிலுள்ள பிரதான தமிழ் பாடசாலை ஒன்றின் மாணவிகள் மூவரை அழைத்துச் சென்று குருவிட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சுமார் ஒருவார காலம் தங்கவைத்த மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குறித்த இளைஞர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை மாவட்ட நீதிபதி உத்தரிட்டார்.
பாடசாலை விடுமுறை தினத்தன்று சுமார் 15 வயதுக்குட்பட்ட மாணவிகள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 09 ஆம் திகதி மாணவிகள் பலாங்கொடை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி பாலிகா ராஜபக்ஷ தெரிவித்தார்.