இராணுவ அதிகாரியின் கவனக்குறைவால் ஐந்து வாகனங்கள் விபத்து: ஒருவர் பலி, மூன்று பேர் மருத்துவமனையில்

மொரட்டுவ புகையிரத நிலையத்தை அடுத்த புதிய காலி வீதியில் இராணுவ அதிகாரி ஒருவர் செலுத்திய வேன் வேகத்தை கட்டுப்படுத்த தவறியதால் சைக்கிளில் பயணித்த ஒருவரும் வேனும் இரண்டு லொறிகளும் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் வீதியில் பயணித்த பாணந்துறை, ஹொரேதுடுவ, கங்கா ஹெல வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய (தச்சர்) ஒருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வேனுக்கும் மினி லொறிக்கும் இடையில் மோதிய நபர் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது தொழில்நுட்பக் கோளாறினால் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய ரக லொறியின் சாரதி விபத்து இடம்பெற்ற போது லொறியின் அடியில் உள்ள தொழில்நுட்பக் கோளாறை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
குறித்த நபர் (வயது 23) மற்றும் வீதியில் பயணித்த பெண் ஒருவரும் (வயது 73) மேலும் ஒருவர் (வயது 50) காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக மொரட்டுவ லுனாவ வைத்தியசாலை மற்றும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவ பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தின் போது காரை இரத்மலானை இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ அதிகாரியே ஓட்டிச் சென்றுள்ளார்
விபத்து நடந்த இடத்திற்கு அடுத்துள்ள மின்விளக்கு சிவப்பு நிறமாக மாறவிருந்த வேளையில் இராணுவ அதிகாரி வேகத்தை அதிகரித்து வீதி விளக்கை கடக்க முற்பட்டதாலேயே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மொரட்டுவை பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தெரியவந்துள்ளது. கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மொரட்டுவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வேனை ஓட்டிச் சென்ற இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



