முட்டை வியாபாரம் தொடர்பில் ஆராய இரவில் சோதனை நடவடிக்கை...

பண்டிகைக் காலங்களில் கடமைகளுக்காக விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விடுமுறை நாட்கள் உட்பட தேவையான போது இரவு நேரங்களிலும் அதிகாரசபை அதிகாரிகள் கடமைகளை மேற்கொள்வார்கள் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், கையிருப்பை மறைத்து வைத்தல் மற்றும் விற்பனை செய்ய மறுத்தமை போன்ற குற்றங்களைச் செய்த கிட்டத்தட்ட 1500 வர்த்தகர்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுற்றிவளைத்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் எனவும், முட்டைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குருநாகல், ஹல்மில்லவெவ மற்றும் கடிகமுவ ஆகிய பகுதிகளில் உள்ள முட்டை பண்ணைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வரும் நாட்களில் சந்தைகளில் குறிப்பாக முட்டை பண்ணைகளில் நடத்தப்படும் சோதனைகள் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



