முல்லைத்தீவில் சட்டவிரோத சிறுவர் இல்லம் - வலயக்கல்விப் பணிப்பாளர் உடைந்தையா?

#Mullaitivu #children #Home #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
முல்லைத்தீவில் சட்டவிரோத சிறுவர் இல்லம் - வலயக்கல்விப் பணிப்பாளர் உடைந்தையா?

முல்லைத்தீவு மாவட்டத்தில் புது குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள "நொக்ஸ் " என்ற பெயரில் இயங்கும் கிறிஸ்தவ முன்பள்ளி, முல்லைத்தீவு வலையக்கல்விப் பணிமணையின் உரிய அனுமதிகள் இன்றிச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

 புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் அமைந்துள்ள குறித்த முன்பள்ளியானது முன்பள்ளி என்ற போர்வையில் மதமாற்ற செயற்பாடுகள் இடம் பெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

 முன்பள்ளியானது கல்வித் திணைக்களத்தின்  உரிய அனுமதிகள் பெறப்படாத நிலையில் வெளி மாகாணங்களில் இருந்து  சிறுவர் சிறுமிகள் அழைத்து வரப்பட்டு கட்டாய மதமாற்றத்திற்கு நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றிய  உயர் அதிகாரியின் பின்னணியில் குறித்த சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக அதிகாரிகள் கேள்வி கேட்க முடியாத சூழல் உருவாகியதாகவும் கூறப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தமிழ்மாறனை அலுவலக இலக்கத்திற்கும் பிரத்தியோக இலக்கத்துக்கும் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!