கணக்காய்வு சேவைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம்
#mahinda yappa abewardana
#Commission for Auditing Service
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
கணக்காய்வாளர் நாயகம் பதவி அடிப்படையில் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராவார். அதற்கமைய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன பதவிச்சத்தியம் செய்துகொண்டார்.
அது மாத்திரமன்றி ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, நந்தசீலி கொடகந்த, ஞானானந்தராஜா தேவஞானன், ஏ.எம். தர்மஜித் நயனகாந்த ஆகியோரும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.



