உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

#GunShoot #Police #Arrest #Lanka4 #SriLanka #sri lanka tamil news
Prathees
2 years ago
உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

பொல்கஹவெல நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

வாகனம் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று காலை பொலிஸார் குறித்த இடத்தில் அவசர போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டனர்.

குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரை நிறுத்துமாறு கட்டளையிட்டதையடுத்து, குறித்த கார் நிற்காமல் திரும்பிச் சென்றுள்ளது.

அப்போது, ​​காரின் டயர் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அதை தடுத்து நிறுத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த காரில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!