பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதியை தடை செய்வது தொடர்பான வர்த்தமானி ...
#SriLanka
#Tamil People
#Tamil
#sri lanka tamil news
#TamilNadu Police
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதியை தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் ஜூன் 1 ஆம் திகதி முதல் பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களின் இறக்குமதிக்கான தடை அமுலுக்கு வரும்.
அதன்படி, பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் துணைக்கருவிகள், பிளாஸ்டிக் மேஜைப் பாத்திரங்கள், சமையலறை பாத்திரங்கள், பிளாஸ்டிக் சுகாதார கழிவறை பொருத்துதல்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.



