புத்தாண்டு காலத்தில் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!

#SriLanka #Sri Lanka President #Police #Festival #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
புத்தாண்டு காலத்தில் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!

புத்தாண்டு காலத்தில் ஆடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்லும்போது பணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார்  அறிவுறுத்தியுள்ளனர்.

பண்டிகை காலத்தின்போது மக்களின் பாதுகாப்பு கருதி வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவில் உடையில் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு போக்குவரத்து உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!