மருதங்கேணி பகுதியில் பொலிசார் துப்பாக்கி சூடு நடாத்தவில்லை: மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!
#SriLanka
#Jaffna
#Crime
#Police
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

நேற்றைய தினம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி கிழக்கு பகுதியில் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதில் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு வினவிய போது, அவ்வாறான சம்பவங்கள் எவையும் நடைபெறவில்லை என அவர் கூறுகின்றார். அவர் மேலும் கூறுகையில்,
குறித்த பகுதியில் கசிப்பு விற்பனை நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பொலிசார் அந்தப் பகுதிக்கு சென்றனர்.
இதன்போது அப்பகுதி மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. ஆனால் அங்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவும் இல்லை, எவரும் காயம் அடையவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.



