பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல்

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை நடைபெறவுள்ளது.
முற்பகல் 11 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் நெத் நியூஸிடம் தெரிவித்தார்.
பிரதமருடனான இந்த கலந்துரையாடலின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்ட தேதியில் நடத்த முடியுமா? இல்லையெனில் வாக்குப்பதிவை ஒத்திவைக்க வேண்டுமா? நாளை நடைபெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலில் நியமனம் செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.



