இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பில் சீனாவின் சில நகர்வுகள் நம்பிக்கைக்குரிய அறிகுறி! அமெரிக்க திறைசேரி செயலாளர்

#SriLanka #Sri Lanka President #Parliament #America
Mayoorikka
2 years ago
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பில் சீனாவின் சில நகர்வுகள் நம்பிக்கைக்குரிய அறிகுறி! அமெரிக்க திறைசேரி செயலாளர்

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பில்  பங்கேற்பதில் சீனாவின் சில நகர்வுகளை பார்த்ததாகவும் சீனா பங்கேற்பது நம்பிக்கைக்குரிய அறிகுறி என்றும் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெல்லன் தெரிவித்தார்.

சில கடன் மறுசீரமைப்புகளில் சீனா விரைவாக செல்ல வேண்டும் என்று யெல்லன் முன்னர் கூறியிருந்த நிலையில், இந்தவாரம் ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த காலக் கூட்டங்களுக்கு முன்னரே யெல்லன் இந்த விடயத்தை ஏஃஎப்பி செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியாளர்கள், நிதி அமைச்சர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் வொஷிங்டனில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக உருவாக்கப்பட்ட உலகளாவிய இறையாண்மைக் கடன் வட்டமேசை இந்த வாரம் ஒன்று கூடும் போது அதன் முன்னிலையில் கலந்துரையாடல்கள் தொடரும் என்றும் யெல்லன் குறிப்பிட்டார்.

கடன் மறுசீரமைப்பின் முக்கிய கூறுகள் குறித்து தாங்கள் பயனுள்ள தொழில்நுட்ப கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், மறுசீரமைப்பில் சீனா பங்கேற்று வருவதாகவும் மேலதிக மேம்பாடுகளுக்காக நாங்கள் அனைவரும் சீனாவுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றார்.

கடன் மறுசீரமைப்புக்காக ஜி20 பொதுவான கட்டமைப்பின் வேகமான மற்றும் கணிக்கக்கூடிய செயல்பாட்டுக்கு வொஷிங்டன் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று குறிப்பிட்டார்.
 
அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பங்குதாரர்களின் கூட்டங்களில்  முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய வளர்ச்சி குறைந்து வருவதால், கடுமையான கடன் சுமைகள் மற்றும் பலவீனமான முதலீட்டினால் உந்தப்பட்ட மந்தமான வளர்ச்சியை எதிர்கொள்ளும் ஏழைப் பொருளாதாரங்களுக்குக் கடினமாக அமையும் என்று உலக வங்கி முன்னரே எச்சரித்தது.

காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை மறுசீரமைக்கவும் சந்திக்கவும் கடன் வழங்குபவர்களின் உந்துதலுக்கு மத்தியில், உலக வங்கியின் பரிணாம வளர்ச்சி குறித்து விவாதத்தின் முக்கிய தலைப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

உலக வங்கிக் குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்கா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!