உண்டியல் முறையில் 8.2 மில்லியன் ருபாய் பணம் சம்பாதித்த இரண்டு பேர் கைது
#Colombo
#Arrest
#Police
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

கொழும்பு 12, கெசல்வத்தை, டேம் வீதியில் வைத்து இரண்டு நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் மூலம் 8.2 மில்லியன் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளையைச் சேர்ந்த 39 வயதுடைய பிரதான சந்தேகநபர் மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கெசல்வத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



