26 புதிய பேருந்துகள் நுவரெலியாவுக்கு !!

#NuwaraEliya #Bus #SriLanka #Lanka4 #Tamil People #Tamil #sri lanka tamil news
Prabha Praneetha
2 years ago
 26 புதிய பேருந்துகள் நுவரெலியாவுக்கு !!

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இ.போ.ச.க்கு சொந்தமான டிப்போக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (09) அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.

இரு மாவட்டங்களில் உள்ள ஏழு டிப்போக்களுக்கு 26 புதிய பேருந்துகள் இதன்போது கையளிக்கப்பட்டன. மேலும் இந்த புதிய பேருந்துகள் கிராமப்புற மற்றும் தோட்டப்புற மக்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பேருந்துகள் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கெத்த மற்றும் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி மற்றும் கம்பளை ஆகிய டிப்போக்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!