அராலி சிறீ முருகன் சனசமூக நிலையத்தின் 83வது ஆண்டு விழாவினை முன்னிட்டு இன்றையதினம் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி
#Jaffna
#competition
#Tamil People
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago
அராலி சிறீ முருகன் சனசமூக நிலையத்தின் 83வது ஆண்டு விழாவினை முன்னிட்டு இன்றையதினம் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டி என்பன நடைபெற்றன.
மரதன் ஓட்டப் போட்டிகளானது நான்கு பிரிவுகளாக நடைபெற்றன.
அந்தவகையில், 14 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு, 16 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு, ஆண்கள் திறந்த பிரிவு மற்றும் பெண்கள் திறந்த பிரிவு என நான்கு பிரிவுகளாக நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி இடம்பெற்றது.
சனசமூக நிலையத்தின் தலைவரது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சனசமூக நிலையத்தினர், வீர வீராங்கனைகள், இளைஞர்கள், யுவதிகள், சமூக மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.