இளைஞர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் - இருவர் கைது!
#Police
#Arrest
#Jaffna
#Death
#Lanka4
Kanimoli
2 years ago
இன்றைய இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீதியால் காரில் சென்றுகொண்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வழிமறித்து கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இளவாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.