கெசல்கமுவ ஓயா காட்டில் அகழ்வில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது
#Arrest
#Police
#SriLanka
#Sri Lankan Army
#sri lanka tamil news
Prathees
2 years ago

பொகவந்தலாவ, கெசல்கமுவ ஓயா காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்து அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மஸ்கெலியா முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கெஹல்கமுவ ஓயாவின் கரையை சேதப்படுத்தும் நோக்கில் தோண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பிரதேசத்தில் வசிக்கும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக பொகவந்தலா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.



