டுபாய் நோக்கிச் சென்ற விமானம் மீண்டும் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது

#Airport #SriLanka #sri lanka tamil news #Lanka4 #Tamilnews
Prathees
2 years ago
டுபாய் நோக்கிச் சென்ற விமானம் மீண்டும் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது

சுமார் 15 மணித்தியாலங்கள் தாமதமாக டுபாய் நோக்கிப் புறப்பட்ட இலங்கை விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 06.25 மணிக்கு துபாய்க்கு விமானம் புறப்பட இருந்தது.

ஆனால் இந்த விமானம் இன்று காலை 09.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் 10.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

அந்த நேரத்தில் இந்த விமானம் இந்தியாவை அண்மித்ததாக நெத் நியூஸ் கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விமானத்தின் தலைமை விமானியின் முன் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை, விமானத்தில் 189 பயணிகளும் 15 பணியாளர்களும் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!