யாழில் சிறுமி ஒருவரை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் கைது

#SriLanka #Jaffna #Girl #Abuse #Sexual Abuse #Arrest #Police #Lanka4
Mayoorikka
2 years ago
 யாழில் சிறுமி ஒருவரை  கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் கைது

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய நால்வர்  சிறுமி ஒருவரை  கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்  யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியும் குற்றச்சாட்டப்பட்டவர்களும் அதே இடத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய 19 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களே 14 வயதுச் சிறுமியை தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தியமை நேற்று பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த வேளைகளிலேயே சந்தேக நபர்கள் இந்ந செயலை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சந்தேக நபர்களும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையில்  சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!