பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சிறுபான்மையினருக்கு எதிரானது! மனித உரிமைகள் கண்காணிப்பகம்

#SriLanka #Terrorist #Human Rights #Human activities #Tamilnews #sri lanka tamil news #Tamil People #Lanka4
Mayoorikka
2 years ago
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சிறுபான்மையினருக்கு எதிரானது! மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அமைதியான விமர்சகர்களின் குரலை ஒடுக்குவதற்கும், சிறுபான்மையினரை குறிவைக்கும் செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

 இதனால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

குறித்த சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு, அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும், சர்வதேச மனித உரிமை தரங்களைப் பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அமைதியான விமர்சகர்களின் குரலை ஒடுக்குவதற்கும், சிறுபான்மையினரை குறிவைக்கும் செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!