கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இளைஞனின் சடலத்தைக் காட்டிக் கொடுத்த நாய்

எல்பிட்டிய, திவிதுர பிரதேசத்தில் தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் 18 வயதுடைய இளைஞனின் சடலம் ஒன்று நேற்று (07) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞன் நேற்று (05) முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிக்க கிராம மக்கள் விசேட நடவடிக்கையும் மேற்கொண்டிருந்தனர். இளைஞனின் சடலம் திவிதுர தோட்டத்தில் உள்ள மலை உச்சியில் புதைக்கப்பட்ட நிலையில் நாய் ஒன்று அந்த இடத்தை விட்டு அகலாமல் சுற்றிச் சுற்றி வந்துள்ளது.
குறித்த இளைஞனின் மண்டை ஓடு குழியிலிருந்து வெளிப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அல்பிட்டிய நீதவான் உத்தரவின் பிரகாரம் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த இளைஞன் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



