எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு
-1.jpg)
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடைபாதை வியாபாரிகள் தமது வியாபாரத்தில் ஈடுபடுவதற்கான சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கூறினார்.
கொலோம்தொட்ட எக்சத் வெலந்த சங்கமய மற்றும் ஏனைய நடைபாதை வியாபாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகளை நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்து அவர்களுடன் சுமுகமாக கலந்துரையாடிய அவர், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவற்றைத் தீர்ப்பதற்கு ஒப்புக்கொண்டார்.
நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவற்றை தீர்ப்பதற்கு குழுவொன்றை நியமிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடிய ரத்நாயக்க, கூட்டத்தின் போது நடைபாதை வியாபாரிகள் சிலரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தார்.
நடைபாதை வியாபாரிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அடையாள அட்டை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .



