சூரியன் வடக்கு நோக்கிய சார்பு இயக்கத்தின் விளைவாக இலங்கைக்கு நேராக இருக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

சூரியன் வடக்கு நோக்கிய சார்பு இயக்கத்தின் விளைவாக ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 15 வரை இலங்கைக்கு நேராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நண்பகல் 12.13 மணியளவில் கொரலவெல்ல, இங்கிரிய, கிரியெல்ல, எம்புல்தெனிய, ஹல்துமுல்ல, ரத்மல்வெஹர மற்றும் வரதெனியாவ ஆகிய பிரதேசங்களில் சூரியன் தலைநிமிர்ந்து காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சில இடங்களில் 50மிமீக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



