மகாவலி துரிதத்திட்டம் என்ற பெயரில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிங்கள குடியேற்றமா?? அச்சத்தில் மக்கள்.

#SriLanka #Kilinochchi #Vanni #Tamil People #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
  மகாவலி துரிதத்திட்டம் என்ற பெயரில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிங்கள குடியேற்றமா?? அச்சத்தில் மக்கள்.

மகாவலி நீர்ப்பாசனத் திட்டம் விவசாயத்துக்கும் மின்சக்தி உற்பத்திக்குமாகவே தொடங்கப்பட்டது என்று கூறப்பட்டாலும், அது சிங்களக் குடியேற்றத்தையே மறைமுக இலக்காகக் கொண்டிருந்தது. 
இத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் பிரதேசத்தின் இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப அல்லாமல் இலங்கையின் இன விகிதா சாரத்துக்கு ஏற்பவே குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இதனால் தமிழ்ப்பகுதிகளில் சிங்கள குடியேற்றம் பெருமெடுப்பில் நிகழ்ந்து இனவிகிதாசாரம் மாற்றிய மைக்கப்பட்டது.

கொக்கிளாயிலிருந்து ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினைக் கடந்து ஒரு கிலோமீற்றர் செல்கின்றபோது வரும் சின்னாறு வரையில் 34 கிலோமீற்றர் கடற்பகுதி உள்ளிட்ட கிராமங்கள் மகாவலி எல் வலயத்தினுள் காணப்படுகின்றன

குறித்த வலயத்தினுள் சிங்கள குடியேற்றங்கள் முன்னதாக மக்கள் இடம்பெயர்ந்திருந்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட கிராமங்களை அண்மித்திருந்த சுமார் 2ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பிரதேசத்தில் எமது மக்கள் உறுதிகளையும், பேமிற்றுக்களையும் கொண்டிருந்த வயல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருந்தன. நீர்த்தாகைகுளம், முந்திரியக் குளம், ஆமையன்குளம், மறுச்சுக்கட்டிக்குளம் உள்ளடக்கிய ஏழுக்கும் அதிகமான குளங்களும் கையகப்படுத்தப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டன. 

இதன்பின்னர் முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் பகுதிகளை உள்ளிடக்கி இப்பகுதி வெலிஓயா என்ற புதிய பெயரில் ஒன்பது கிராமங்களைக் கொண்ட ஒரு பிரதேச செயலாளர் பிரிவொன்றாக பிரிகடனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொக்காவிலிருந்து இரணைமடு வரை சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொக்காவிலை சுற்றி இரண்டு பாரிய இராணுவமுகாம்கள் அமைக்கபப்ட்டுள்ளன. இதனை காரணம் காட்டி கொக்காவிலை அண்டிய பிரதேசத்தில்  காடுகளை வெட்டி புதிதாக பாதைகள் அமைத்துள்ளார்கள். ஒரு கிராமத்திற்கு செல்லக்கூடியவாறு அந்த பாதைகள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த பாதை ஊடாக இராணுவத்தினர் சென்று வருவதாகவும், அத்துடன் சில சிங்கள மக்களும் அதாவது சிறுபிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அந்த பாதை ஊடாக சென்று வருவதை அவதானிக்க கூடியதாக  உள்ளது. அதேவேளை குறித்த பாதையினுடாக கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களோ அல்லது அந்த பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களோ செல்வதற்கு படையினரால் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

குறித்த பிரதேசம் இரணைமடு பிரதேசத்தினை அண்டிய பிரதேசமாக காணப்படுகின்றது, அதாவது அம்பகாமம் விமானத்தளம் உள்ள பகுதி. இதன் காரணமாக பாதுகாப்புக்கருதி குடியிருப்புக்கள் உருவாக்கப்படுகின்றனவா? அவ்வாறு தற்பொழுது சிறிய குடியிருப்புகள் உருவாக்கி எதிர்காலத்தில் அது பாரிய சிங்கள கிராமமாகவும்  வளர்ச்சி அடையாக கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. 

இதற்கிடையில்  இரணைமடுக் குளத்திற்கு மகாவலி நீரை கொண்டுவரும் திட்டம் சிங்கள அரசாங்கத்திற்கு நீண்டகாலமாகவே இருந்துவருகிறது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பினால்  அது கைகூடவில்லை. இந்தநிலையில் தற்பொழுது சிங்கள குடியேற்றங்களை அமைத்துவிட்டு இரணைமடு குளத்திற்கு மகாவலி நீரை கொண்டுவரலாமா? அவ்வாறு வந்த பின்னர் அந்த பிரதேசங்களினை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் எதிர்பார்புடனும் தற்பொழுது இந்த சிங்கள குடியிருப்புக்களை இந்த பிரதேசத்தில்  உருவாக்கி இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுகின்றது.

அவ்வாறு வரும் பட்சத்தில் குறித்த குடியிருப்புக்கள் மகாவலி குடியிருப்பாக மாறிவிடும். பின்னர் அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் இப்பகுதிக்குள் அதிகரிக்கப்படும்  சாத்தியங்களும் அமையலாம்.

உண்மையில் தமிழர்களின்  நோக்கம்  இனவாதமோ, மத வாதமோ நாட்டை பிளவு செய்வதோ  அல்ல. ஆனால் எமது சுதந்திரம், எமது தொன்மை, சுகாதாரம், கல்வி, வேலை போன்ற அடிப்படை  உரிமைகளை சுரண்டாமலும் பக்க சார்பில்லாமல் நடந்தாலும் போதும்.
 
  Lanka4 ஊடகம். 
செய்திதாளர். சேது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!