5 கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது
#Badulla
#Arrest
#Sri Lankan Army
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

பதுளை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் 05 கஜமுத்துக்களை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் பசறை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பதுளை தர்மதுதா கல்லூரிக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் புலனாய்வு செயலணி தெரிவித்துள்ளது.



