யாழ். மக்களுக்கு வரவுள்ள ஆபத்து: வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி வெளியிட்ட தகவல்

#SriLanka #Jaffna #sun #hot #Sweat #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
யாழ். மக்களுக்கு வரவுள்ள ஆபத்து:  வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி வெளியிட்ட தகவல்

யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 14திகதிக்கு பின்னர் சூரியன் உச்சம் கொடுக்க உள்ள நிலையில் வெப்பநிலை 35 பாகையை தாண்டும்  என யாழ் பிராந்திய வளிமண்டலத் திணைக்களப் பெறுப்பதிகாரி தர்மலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சூரியன் வட துருவ நோக்கிய பாதையில் கடந்த 5ஆம் திகதி இலங்கையின் தெற்கு பகுதியான அம்பாந்தோட்டைப் பகுதியில் உச்சம் கொடுத்த நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் யாழ் மாவட்டத்திற்கு உச்சம் கொடுக்க உள்ளது.

தற்போது யாழ் மாவட்டத்தின் வெப்பநிலை 34 பாகையை தாண்டியுள்ள  நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர்  35 பாகையை தாண்டும். 

இவ்வாறான நேரங்களில் யாழ். மாவட்டத்தின் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் இடி மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

யாழ்  மாவட்டத்தில் உச்சம் கொடுக்கும் சூரியன் எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை கடுமையான வெப்பம் நிலவுகின்ற நிலையில்  எதிர்வரும் மே மாதம் முதல் திகதி வரை வெப்பநிலை தொடரக்கூடிய சாத்தியங்கள் உண்டு என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!