இன்றைய வேத வசனம் 07.04.2023: நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று

தேவனின் படைப்பில் நாம் பாவம்யில்லாதவர்களாய் தூய்மையான மனதோடு இருந்தோம்!
தீமையான எண்ணங்கள் எதையுமே தேவன் மனிதனின் மனதில் தரவில்லை. ஆகவே ஆதாம் தேவனின் முகத்தை தினம் தினம் காணவும், தேவனோடு உலாவும், பேசவும் முடிந்தது!
தேவன் ஆதாமிற்கு தோட்டத்தில் இடமும், அத்தனை மிருகஜீவன்களையும் ஆளும் உரிமையும் கொடுத்தார்.
ஆனால், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்றும் கட்டளையிட்டார்.
தேவன் இட்ட கட்டளையின் அர்த்தம் என்ன? நன்மை, தீமையை அறிகிற அறிவு பாவம் எது என்பதை நமக்கு உணர்த்தும்.
பாவம் மரணத்தை உண்டு பண்ணும். மரணம் தேவனிடம் இருந்து நம்மை நிரந்தரமாகப் பிரித்து விடும்!
ஆனால், தேவ கட்டளையை ஆதாம் மீறியதால், நன்மை தீமையை அறிகிற அறிவு மனுஷற்குள் வந்தது.
எனவே, நாம் தவறு அல்லது, தீங்கை அல்லது, கொடுமையை செய்யும் போது நான் தெரியாமல் செய்துவிட்டேன் என்று சொல்ல முடியாது.
வேதாகமம் தெளிவாக சொல்கிறது! பாவம் செய்கிற ஆத்துமா சாகும். தீமை செய்யும் போது பாவம் உன் வீட்டுவாசலில் படுத்திருக்கும்.
ஆனால் தேவன் தாம் படைத்த மனிதனை மறந்து விடவில்லை! எனவேதான் அவர் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரணத்தை சந்தித்து, அதில் வெற்றியும் கொண்டார்.
அவர் தம் வாழ்நாள் முழுவதும் நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தார். எனவேதான் வேதாகமம் சொல்கிறது நீ நன்மையானதை பின்பற்று. என்று.
பொல்லாங்கு செய்கிற எந்த ஆத்மாவுக்கும் உபத்திரவமும், வியாகுலமும் உண்டாகும்!
ஆகவே, நன்மை செய்வதற்கு ஜாக்கிரதை படவேண்டும். எவன் நன்மை செய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும். எனவே சகோதரியே சகோதரனே நன்மையானதைப்பின்பற்று.
நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல், தீமையை நன்மையால் வெல்லு. ஆமென்!! அல்லேலூயா!!!
யோவான் 1:11
பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.



