வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளில் உள்ள காலாவதி திகதியை பார்த்து வாங்கவும்:- பல கடைகளில் காலாவதியான முட்டைகள் விற்பனையாகிறது!!

முட்டை உற்பத்திக்கான மூலப் பொருள் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்பட்டமையாலும், முட்டை உற்பத்தி தொழிற்துறை பாதிப்பு ஏற்பட்டமையாலும் , மற்றும் அதிக மக்கள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை அதிகம் உண்பதால் சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்ததுடன், முட்டையின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்த போதும் முட்டைக்கான நிர்ணய விலையை தொடர்ச்சியாக பேண முடியாத நிலை தற்பொழுது காணப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை நுகர்வுக்கான கேள்வி அதிகமாகவே காணப்படுகின்றது .
ஆகவே முட்டையை இறக்குமதி செய்து சாதாரண விலையில் சந்தையில் விநியோகிக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை முன்வைத்தார்கள்.
அந்தவகையில் , முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தொடர்ந்து உலகின் தலைசிறந்த 5 முட்டை உற்பத்தி நாடுகளிடமிருந்து முட்டை இறக்குமதி செய்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் , இந்திய , மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளில் உற்பத்தி திகதியும் , காலாவதியாகும் திகதியும் அச்சிட்டு இறக்குமதி செய்யப்படுகின்றது.

முன் பதிவு செய்து நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு குறித்த முட்டைகள் நாட்டை வந்தடையும் காலம் அதிகமாகவே உள்ளது, ஆகவே, இது எமக்கு உடல் ரீதியாக கேடுகளை விளைவிக்கக்கூடிய சாத்தியக்கூறு அதிகமே , ஆகையால் முட்டைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் முட்டையின் ஆரம்ப மற்றும் முடிவு திகதியை பார்த்து கொள்வனவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மற்றும் , 24 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
{Lanka4created}



