எரிவாயு சிலிண்டரின் விலை குறித்து முக்கிய அறிவிப்பு!
-1.jpg)
எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்குமான விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விலைப்பட்டியலைப் பார்வையிடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை கொடுக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை கேட்டுள்ளது.
அந்த வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு புதிய விலை கடந்த செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்த நிலையில் புதிய விலைகள் பின்வருமாறு அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை- 4,050 /-
05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை - 1,690/-
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை - 852/-
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் விலைச்சூத்திரத்திற்கு ஏற்ப இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளதாக அதன் உயரதிகாரி தெரிவித்தார்.



