மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஆபரேஷன் செய்த மருத்துவரின் தவறால் ஒரு சிறுமி மரணம்: பொலிஸ் விசாரணை ஆரம்பம்

சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயதுடைய சிறுமி, வைத்தியரின் அலட்சியத்தால் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸார் நேற்று பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளனர்.
16 வயதுடைய பாத்திமா மல்ஷா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிறுமியின் வயிற்றில் கற்கள் இருந்ததால் அவரது குடும்பத்தினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தபோது சிறுமி உயிரிழந்தார்.
குறித்த வைத்தியரின் அலட்சியத்தால் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தச் சிறுமியின் மரணம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான்ன நேற்று தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வைத்தியரிடம் பொலிசார் விசாரிக்க உள்ளனர்.



