சரத் வீரசேகர இனவாதத்தை தூண்டுகிறார்: குற்றம் சுமத்திய வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

தமிழ் மக்கள் சமஷ்டியை கோரவில்லை தமிழ் அரசியல்வாதிகளும் பிரிவினையை விரும்பும் புலம்பெயர் அமைப்புக்களுமே சமஸ்டியை கோருவதாக அப்பட்டமான இனவாத பொய்யுரைப்பை கட்டவிழ்த்து விட்டுள்ளார் என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழர்களை பொறுத்தவரை இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து சமஷ்டி கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்ற அரசியல் கட்சிகளுக்கே தமது ஆணையை வழங்கியுள்ளனர்.
இது ஒவ்வொரு தேர்தல்களிலும் நிரூபணமாகியுள்ளது இந்த உண்மையை மறைத்து சரத் வீரசேகர இனவாதத்தை தூண்டுகிறார் என்றும் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
1952,1956,1960 ஆம் ஆண்டுகளில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் தமிழ்க் கட்சிகள் தேர்தல்களில் மக்களை நோக்கி சோறா? சமஷ்டியா? வேண்டும் என கேட்ட போது சுதந்திர சமஷ்டியே வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் ஆணையை வழங்கினர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



