இலங்கை உடன்படிக்கையை மதிக்கத் தவறினால் imf இன் 2ஆவது நிதி பெறும் வாய்ப்பு கிடைக்காது!

#SriLanka #Sri Lanka President #IMF #money #Finance #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
இலங்கை உடன்படிக்கையை மதிக்கத் தவறினால் imf இன் 2ஆவது நிதி பெறும் வாய்ப்பு கிடைக்காது!

மாதாந்தம் ரூ. 200,000 சம்பளம் பெறும் ஊழியர் ஒருவருக்கு அறவிடப்படும் வரியாக இனி ரூ.7,500 செலுத்த வேண்டும். தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகுறைப்பிலிருந்து ரூ.5,800 மீதப்படும். எனவே அவர் அல்லது அவள் 1,700 ரூபாய் மாத்திரமே செலுத்த வேண்டியிருக்கும் என  ஊடகவியலாளர் சந்திப்பின் போது  வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

2001 தொடக்கம் 2007 வரையிலான இலங்கையின் வர்த்தக இடைவெளியானது 25.5 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதுடன், அரசாங்கத்தின் டொலர் மற்றும் ரூபாயை மேம்படுத்துவதன் மூலம் 2028 ஆம் ஆண்டளவில் இதை நிர்வகிக்க கூடியவாறு குறைக்க IMF விரும்புகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பாரிப்பின் போது அறவிடப்படும் வரி உயர்வு மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு விலக்களித்தலின் மூலம் அரச வருவாயை தற்போதுள்ள 8% இலிருந்து 20 வீதமாக உயர்த்துவதே நோக்கமாகும். அந்தப் பொருளாதார மேம்பாட்டின் நன்மைகள் பொது ஊழியர்களை சென்றடையும்.  

வரி உயர்வின் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு விலக்களிப்பதன் மூலம் அரச வருவாயை உயர்த்தும் IMF இன் திட்டத்திற்கு இலங்கை உடன்பட்டுள்ளது. எனவே 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் , விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெற இவ்வாறான சீர்திருத்தங்களை செய்ய அரசாங்கம் முனைகின்றது.

இலங்கை உடன்படிக்கையை மதிக்கத் தவறினால், விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெறும் 2 ஆவது வாய்ப்பு எமக்குக் கிடைக்காது. எவ்வாறாயினும் பொருளாதார மேம்பாட்டின் முதல் நிகழ்வாக அரசாங்கம் தற்போதைய வரி வீத்ததைக் குறைக்கவே முயல்கிறது.

உலக சந்தையில் எரிவாயு மற்றும் எண்ணெய் விலை குறைப்பின் பலனைக் கடத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என ஒரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போது அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது , பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைக்குறைப்பால் வாழ்க்கைச் செலவு குறைந்து மேலும் பொருட்களின் விலைகளைக் குறைக்கப் பங்களிக்கும் என அவர் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!