இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்: மக்களே அவதானம்
#SriLanka
#weather
#sun
#hot
#Health
#Healthy
#Health Department
#Lanka4
Mayoorikka
2 years ago

சூரியனின் வடக்கு நோக்கிய ஒப்பிட்டு இயக்கத்தில் இந்தாண்டு இன்று முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று (05) தல்பே, வலிப்பிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்மலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும் காலப்பகுதியில் அதிக உஷ்ணம் ஏற்படும். இதன் காரணமாக மக்கள் வெளியில் செல்லும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டியும், அதிகளவில் நீர் அருந்துமாறும் சுகாதார பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.



