சிறிலங்காவில் பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டம்

#strike #SriLanka #sri lanka tamil news #Protest #Lanka4
Kanimoli
2 years ago
சிறிலங்காவில் பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டம்

சிறிலங்காவில் பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு, தமது தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று முதல் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

கடந்த மார்ச் 13 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், ஆனால் உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை என தொழிற்சங்க அழைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.
.
இதன்படி, மறு அறிவித்தல் வரை அனைத்து அலுவலக கடமைகளிலிருந்தும் வாடிக்கையாளர் சேவைகளில் கலந்துகொள்வதிலிருந்தும் விலகியிருக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்தும் எவ்வித பதிலும் எமக்கு கிடைக்கவில்லை எனவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
பொது மேலாளர் மற்றும் அதிகாரிகளுடன் பலசுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன, ஆனால் அவை வெற்றிபெறவில்லை, என்றும் அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

தமது போராட்டம் காரணமாக நீர் விநியோகக் கட்டமைப்பு பழுதடையும் போது பழுதுபார்ப்பதில் தாமதம் ஏற்படும். எனவே நீர் விநியோகம் தடைபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!