கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் பால்பைகற் ஒவ்வாமையால் மாணவர்கள் அனுமதி
#Hospital
#Kilinochchi
#children
#Lanka4
Kanimoli
2 years ago

கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பால்பைகற் ஒவ்வாமையால் 13 மாணவர்கள் வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டு கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் நடைமுறைக்கு ஊடாக நிறுவனமொன்று பொதியிடப்பட்ட பால் பொதிகளை வழங்கியுள்ளது.
இந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எவரும் ஆபத்தான நிலைமையில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பால் பொதிகளின் மாதிரிகள் கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விநியோகம் தடைபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



