சிறிலங்கா அரச தலைவர் கூறுவதுபோல நாட்டில் இனப்பிரச்சினை இல்லை - நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர

#Ranil wickremesinghe #Minister #Sri Lanka President #Lanka4
Kanimoli
2 years ago
சிறிலங்கா அரச தலைவர் கூறுவதுபோல நாட்டில் இனப்பிரச்சினை இல்லை - நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர

சிறிலங்காவின் அரச தலைவர் கூறுவதுபோல நாட்டில் இனப்பிரச்சினை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதியை 'வடுநங்கல' பகுதி எனக் குறிப்பிட்ட அவர், அங்கு சிவன் ஆலயம் உள்ளதென கூறப்படுவதாகவும் தெரிவித்தார்.
 
இந்த சிவன் கோயிலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், சிவனின் சாபத்திற்கு ஆளாகவேண்டும் என சபையில் உரையாற்றிய சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினார்.
 
ஆனால், புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து, சட்டத்திற்கு முரணாக சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராக சிவனின் சாபம் திரும்புமே தவிர, ஏனைய தரப்பினருக்கு சாபம் திரும்பாது என்று தாம் கருதுவதாக சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
 
வடுநங்கல பகுதியில், விஹாரையில், பௌத்த சின்னங்கள் இருந்தமை 1970 ஆம் ஆண்டுகளில் தொல்பொருள் சான்றுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
அந்த விஹாரைக்கு அருகாமையில், 11 குளங்கள் இருந்துள்ளன. 
2018 ஆம் ஆண்டில், அவை சேதமாக்கப்பட்டு, வனம் அழிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டுதான், அங்கு சிவன் ஆலயம் உருவாக்கப்பட்டது.
 
இதேபோன்றுதான், குறுந்தூர் விஹாரையிலும் இடம்பெற்றது. 
இதுதான் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையா?
 
இந்தநிலையில் தமிழ் இனவாத அரசியல்வாதிகளே, இனவாத பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றனர் என்றும் சரத் வீரசேகர குற்றம் சுமத்தினார்.
 
இனப்பிரச்சினை உள்ளதாக அரச தலைவர் கூறுகிறார்.
ஆனால், நாட்டில் அவ்வாறு இனப்பிரச்சினை இல்லை.
அவ்வாறிருந்தால், 50 வீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் எவ்வாறு தெற்கு சிங்கள மக்களுடன் இருக்கிறார்கள்?
 
தமிழ் வர்த்தகர்களே பெருமளவான வர்த்தக நிலையங்களை நடத்துகின்றனர்.
அவற்றில், 90 வீதத்திற்கும் அதிகமான நுகர்வோர் சிங்களவர்களாவர்.
 
அவர்கள், கொள்வனவை நிறுத்தினால், அந்த வர்த்தகர்கள், மீளவும் வடக்கிற்கு செல்ல வேண்டி ஏற்படும்.
எனவே, இல்லாத இனப்பிரச்சினையை தோற்றுவிக்கவேண்டாம் என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இதனை அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!