பொருட்களின் விலை குறைப்பின் பலன் வெளிமாவட்டங்களுக்கு கிடைக்கிறதா? நுகர்வோர் அதிகாரசபை கவனம்
#Colombo
#Food
#prices
#Investigation
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

அமெரிக்க டொலரின் பெறுமதி குறைவு மற்றும் மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் உணவு உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலை நியாயமான முறையில் குறைந்துள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு பொருட்களின் விலை குறைவினால் உரிய பலன் கிடைக்குமா என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.



